உலகின் மிகப்பெரிய பேனா தயாரித்து கின்னஸ் சாதனை

#Guinness
advertisement

கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில் ஸ்ரீநிவாஸா மற்றும் அவரது குழுவினர், ஏதோ பீரங்கியை சுமப்பதைப் போல பேனாவை தோளில் சுமந்து தூக்கி வருகின்றனர். மாபெரும் பேப்பர் ஒன்றில் அந்தப் பேனாவை கொண்டு எழுதிக் காண்பித்தனர்.

இந்த பேனா குறித்த விவரங்களையும் கின்னஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. உலகிலேயே மிகப் பெரியதாக கருதப்படும் இந்த பேனா 5 மீட்டர் நீளம் அல்லது 18 அடி நீளம் கொண்டதாகும். சுமார் 37.23 கிலோ அளவில் பேனா உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய புராணக் கதைகளில் கூறப்படும் பிரம்மாண்டத்தின் அடிப்படையில் ஸ்ரீநிவாஸா குழுவினர் இந்தப் பேனாவை உருவாக்கினர் என்று கின்னஸ் அமைப்பு தெரிவிக்கிறது.

பேனாவுக்கு வெளியே அமைந்துள்ள வெண்கல தகடு என்பது 9 கிலோ எடை கொண்டதாகும். இதற்கு முன்பு 1.45 மீட்டர் அல்லது 4 அடி 9 இன்ச் அளவில் தயாரிக்கப்பட்டதே மிகப் பெரிய பேனாவாக இருந்தது. அந்த சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர். அதே சமயம், கின்னஸ் அமைப்பின் விதிமுறைகளின்படி இந்தப் பேனாவில் எழுதவும் முடிகிறது.