ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளில் இந்தியா அமெரிக்காவுடன் சேர்ந்து நிற்குமா?

#India #Srilanka #Russia #Ukrain-Russia
advertisement

உலக வரலாற்றில் எந்தப் பக்கம் நிற்கவேண்டும் என்பதை இந்தியா முடிவு செய்யவேண்டும் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபா் புடினுக்கு ஆதரவளிப்பது, மிக மோசமான பின்விளைவுகளை உண்டாக்குவதற்கு ஆதரவு தருவதாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை செயற்படுத்தி வருவதன் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணையை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் சாகி கருத்து வெளியிடுகையில், ” உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

எனினும் சலுகை விலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது எங்களது பொருளாதாரத் தடைக்கு எதிரானது இல்லை.

இருந்தாலும்  வரலாற்றில் எந்தப் பக்கம் நிற்கவேண்டும் என்பதை இந்தியா முடிவு செய்யவேண்டும். ரஷ்ய அதிபா் புடினுக்கு ஆதரவளிப்பது, மிக மோசமான பின்விளைவுகளை உண்டாக்குவதற்கு ஆதரவு தருவதாகும்”  எனத் தெரிவித்துள்ளார்.