பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் நிலவரம் என்ன?

advertisement

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் வாக்குப் பதிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் மற்றும் தீவிர வலதுசாரி மரீன் லே பென் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

49 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 12 வேட்பாளர்களிடையே இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்கான இரு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

உக்ரைனில் ரஷ்யாவின் போர் தொடர்பில் அவதானம் செலுத்தி இருக்கும் ஜனாதிபதி, தேர்தல் பிரசாரத்தில் குறைந்த நேரத்தையே செலவிட்டு வந்தார். 

இந்நிலையில் குடியேறிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரானவரான லே பென் மெக்ரோனுக்கு கடும் சவாலாக உள்ளார்.

முதல் சுற்று தேர்தலில் யாருக்கும் 50 வீதத்துக்கும் மேலான வாக்குகள் கிடைக்கவில்லையென்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்களுக்கு இடையே வரும் 24 ஆம் திகதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பெறுப்பேற்பார்.

இந்தத் தேர்தலைத் தொடர்ந்து, பிரான்ஸ் பாராளுமன்றத்துக்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.