லண்டனில் பட்டப்பகலில் பெண் ஒருவர் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண் ஆபத்தன நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஹாம் பகுதியில் உள்ள இந்தி உணவகம் ஒன்றிவைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் குறித்த பெருநகர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த உணவகம் மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.