இந்தியாவில் திடீரென தீப்பிடித்த கிணறுகள்! நடப்பது என்ன?

advertisement

இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள பாலக்காட்டு மாவட்டத்திலுள்ள வீடுகளின் கிணறுகளில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிவது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி மற்றும் கூட்ட நாடு பகுதிகளிலுள்ள கிணறுகளில் தண்ணீரில் தீப்பிடித்து எரிந்து வருகின்றது.

இது குறித்து அரசு அதிகாரிகளுக்கும் தீயணைப்புத் துறை மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட கிணறுகளில் இவ்வாறு தீப்பிழம்புகள் காணப்பட்டு வருகின்றன.

advertisement

இந்நிலையில் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில கிணறுகளில் பெற்றோல் வாசனை வெளிவந்த வண்ணமுள்ளது.

அதேநேரத்தில் அதிகாரிகள் இந்தப் பகுதியிலுள்ள பெற்றோல் குதங்களிலிருந்து கிணறுகளில் பெற்றோல் கலந்திருக்கலாம், அதன் மூலமும் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

பாலக்காடு மாவட்டத்தில் கேரளாவிலேயே மிக அதிகமாக வெயில் அதிகரித்துள்ளது.

அதிக வெப்பத்தின் விளைவாக தீ பிடித்து இருக்குமா எனவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். உண்மையான காரணம் என்ன என்று இதுவரை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் கிணற்றில் தீப்பிடித்து எரிவதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.