விரைவில் வெளியாகும் சிம்பு ஹன்சிகா இணையும் திரைப்படம்

#Simbu #Hansika Motwani #Dhansika
advertisement

பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.  இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருந்த நிலையில் இப்போது சிம்புவின் மாநாடு ரிலிஸ் ஆகி பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் மஹா படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வரும் ஜூன் மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்போடு படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.