திடீரென மயங்கி விழுந்த சீமான் - நடந்தது என்ன...?

advertisement

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

திருவொற்றியூரில் அண்ணாமலை நகர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மக்களை சந்திக்க இன்று நேரில் சென்றிருந்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். மக்களை சந்தித்தப் பிறகு, பத்திரிகையாளர்களை சந்திக்க அவர் வருகையில், திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அவர் மயங்கி விழுந்ததும், அருகிலிருந்து நாம் தமிழர் கட்சி தொண்டர்கள், அவருக்கு முதலுதவி அளித்தனர். தொடர்ந்து அங்கிருந்த ஆம்புலன்ஸில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின், தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ளார். வெயில் காரணமாக ஏற்பட்ட தாக்கத்தினால் அவர் மயங்கியிருக்கலாம் என்றே கூறப்படுகிறது. முதலுதவியிலேயே அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதால், மேற்கொண்டு ஓய்வெடுக்க உள்ளார்.

சீமானின் பத்திரிகையாளர் சந்திப்பு, நேரலையாக நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேரலையில் சென்று கொண்டிருந்தது. அதன்படி அவர் முழு பத்திரிகையாளர் சந்திப்பும் முடித்துவிட்டு, மைக்கை கழட்டும்போது அவர் அப்படியே கீழே சரிந்து விழுவது பதிவாகியுள்ளது.

இதன்பின்னர் நேரலை கட் செய்யப்பட்டிருக்கிறது. பின் சீமான் பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் அழைத்துச் செல்லப்பட்டு, தற்போது நலமுடன் திரும்பியிருக்கிறார். அந்தப் புகைப்படங்களும் வெளியாகிவருகின்றது.