ஜனாதிபதி பதவியை ஏற்பதற்கு தயார்-சஜித்

advertisement

"கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினால், ஜனாதிபதி பதவியை ஏற்பதற்கு தான் தயார்" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதன்போது, ஜனாதிபதி பதவி விலகினால், நாடாளுமன்றத்தில் பெரும்பாலானவர்கள் விரும்பினால் ஜனாதிபதியாகச் செயற்படத் தான் தயார் என்று சஜித் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கவும் அவர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.