அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள கரோவிண்ட்ஸ் பொழுதுபோக்கு பூங்காவில் குறிப்பிட்ட தீம் பார்க்கில் இருக்கும் ரோலர்கோஸ்டரில் சவாரி செய்த ரைடர்கள், 45 நிமிடங்களுக்கு, தலைகீழாய் தொங்கியபடி, தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் அமைப்பில் ஏற்பட்ட கோளாறால் ரோலர் கோஸ்டர் சவாரி நடுவழியில் நிறுத்தப்பட்டது மற்றும் அதில் இருந்த ரைடர்கள் 45 நிமிடங்கள் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக அவர்களில் யாருக்கும் எந்த காயம் ஏற்படவில்லை.
'ஃப்ளையிங் கோப்ரா' என்று பெயரிடப்பட்ட அந்த ரோலர்கோஸ்டர் ஆனது 50 மைல் வேகத்தில் 360 டிகிரி கோண லூப் வழியாக ரைடர்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. 125 அடி உயரம் கொண்ட இந்த ரோலர் கோஸ்டர் ஆனது ஒரு சவாரி முடிவதற்குள் அதிலுள்ள ரைடர்களை ஆறு முறை தலைகீழாக புரட்டும்படி அமைக்கப்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த ஃப்ளையிங் கோப்ராவில் 'ரைட்' சென்றவர்கள் தான் 45 நிமிடங்களுக்கு தலைகீழாக தொங்கி உள்ளனர்.