பிரித்தானியாவில் புதிய சாதனை!

advertisement

பிரித்தானியாவில் ஒரு வாரத்தில் கொவிட் தொற்று பாதிப்பு ஒரு மில்லியனாக உயர்ந்துள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒமிக்ரோன் மாறுபாடு பிஏ.2 தொடர்ந்து பரவி வருவதால், ஸ்வாப் சோதனைகள், ஒவ்வொரு 16 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றன.

முந்தைய வாரத்தில் 3.3 மில்லியனாக இருந்த கொவிட் தொற்று பாதிப்பு, தற்போது 4.3 மில்லியனுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
மார்ச் 19ஆம் திகதியுடன் முடிவடையும் வாரத்தின் புள்ளிவிபரங்கள், சமூகத்தில் வைரஸுடன் என்ன நடக்கிறது என்பதற்கான மிகத் துல்லியமான பிரதிபலிப்பைக் கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

கடந்த வாரம் ஸ்கொட்லாந்தில் 11 பேரில் ஒருவருக்கு வைரஸ் இருப்பது புதிய சாதனையாக பதிவானது.

advertisement

மேலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொற்று வீதங்கள் உயர்ந்தன. இருப்பினும் வடக்கு அயர்லாந்தில் நோய்த்தொற்றுகள் குறையத் தொடங்கியுள்ளன.

இங்கிலாந்தில் கடந்த வாரம் 4.9 சதவீதமாக இருந்த கொவிட் தொற்று பாதிப்பு தற்போது 6.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தோராயமாக 16 பேரில் ஒருவர் என்ற வீதத்தில் உள்ளது.

வேல்ஸில் கடந்த வாரம் 4.1 சதவீதமாக இருந்த கொவிட் தொற்று பாதிப்பு தற்போது 6.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தோராயமாக 16 பேரில் ஒருவர் என்ற வீதத்தில் உள்ளது.

ஸ்கொட்லாந்தில் கடந்த வாரம் 7.15 சதவீதமாக இருந்த கொவிட் தொற்று பாதிப்பு தற்போது 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தோராயமாக 11 பேரில் ஒருவர் என்ற வீதத்தில் உள்ளது.

வடக்கு அயர்லாந்தில் கடந்த வாரம் 7.1 சதவீதமாக இருந்த கொவிட் தொற்று பாதிப்பு தற்போது 5.9 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இது தோராயமாக 17 பேரில் ஒருவர் என்ற வீதத்தில் உள்ளது.