தண்ணீரில் விழுந்த குழந்தை.. நொடிப் பொழுதில் தாய் செய்த செயல்

advertisement

பொதுவாக தண்ணீரைப் பார்த்தாலே, துருதுருவென வளரும் குழந்தைகள் துள்ளி குதித்துவிடுவார்கள். இந்த சம்பவத்திலும் அப்படித்தான். 

நீச்சல் குளம் அருகே நின்று கொண்டிருந்த சின்னஞ்சிறு பையன் திடீரென தண்ணீரில் குதித்து விட்டான். பையன் குதிக்கத் தயாராகும் முன்பே அங்கு ஓடோடி வந்த அவனது அம்மா, குழந்தையின் டி-ஷர்டை லாவகமாக ஒற்றை கையில் பிடித்து விட்டார். 

இதை தொடர்ந்து, குழந்தையை தண்ணீரில் இருந்து தூக்கி அவர் காப்பாற்றினார். டிவிட்டரில் தி ஃபைஜன் என்னும் யூசர் இதுகுறித்த வீடியோவை வெளியிட, ஏறத்தாழ 5 லட்சம் பேர் அதைப் பார்வையிட்டுள்ளனர். 

சுமார் 15 ஆயிரம் பேர் வீடியோவை லைக் செய்துள்ளனர். தக்க சமயத்தில் ஓடோடி வந்த தாயின் செயலை பலரும் பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.