ஐபிஎல் போட்டிகளில் இது வரை அதிக சம்பளம் பெற்ற வீரர்கள்

#IPL Cricket #Cricket
advertisement

2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோரும் இந்த போட்டியை எதிர்பார்த்து வருகின்றனர். இந்தாண்டு மொத்தம் 10 அணிகளுக்கிடையே போட்டி நடக்கிறது. 

15வது ஆண்டாக நடக்கும் இந்த போட்டி பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த 14 சீசன்களில் எந்தெந்த வீரர்கள் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்ற டாப் 5 பட்டியலை இங்கு பார்க்கலாம்.

ஏபி டிவில்லியர்ஸ் - ரூ100 கோடி
தென்னாப்பிரிக்க அணி வீரரான இவர் ஐபிஎல் போட்டியின் நட்சத்திர வீரர். இவர் கடந்த 2008ம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காகவே விளையாடி வருகிறார். இவருக்கு இது தான் கடைசி ஐபிஎல் போட்டி இவர் இதுவரை வாங்கிய சம்பளம் ரூ100 கோடி.

சுரேஷ் ரெய்னா - ரூ110 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் தான் சுரேஷ் ரெய்னா. இவர் 2008 ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடியது பலரை ஈர்க்க வைத்தது. ஆனால் பெரும் ஏமாற்றமாக இவரை இந்த சீசனில் யாரும் ஏலம் எடுக்கவில்லை. இவர் கடந்த 2008 முதல் 2021 வரை வாங்கிய சம்பளம் ரூ110 கோடி.

advertisement

விராட் கோலி -ரூ158 கோடி
இந்திய அணியில் கேப்டனாக இருந்து சச்சினிற்கு இணையாக பேசப்பட்டவர் விராட் கோலி, இவர் கடந்த 2008ம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை இருந்தாலும் இந்தாண்டு ரூ15 கோடிக்கு ஏலம் போயுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக இவர் ரூ17 கோடிக்கு ஏலம் போனார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் இவர் தான். இவர் இது வரை பெற்ற சம்பளம் ரூ158 கோடி.

ரோஹித் சர்மா -ரூ162 கோடி
மும்பை அணியில் கேப்டனான இவர் இதுவரை அந்த அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இவர் இந்தாண்டு ரூ16 கோடிக்கு ஏலம் போன நிலையில் இதுவரை அவர் சம்பளமாக ரூ162 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.

தோனி - ரூ164 கோடி
2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் துவங்கியது முதலே சென்னை அணிக்கு கேப்டனாக இருப்பவர் மகேந்திரசிங் தோனி, இவர் இதுவரை 4 முறை சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இந்நிலையில் 2008ம் ஆண்டு ரூ6 கோடி ஒப்பந்தமான தோனி தொடர்ந்து 14 ஆண்டுகள் சென்னை அணிக்கு விளையாடிய நிலையில் இதுவரை ரூ164 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.