பிரான்ஸ் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!

advertisement

பிரான்ஸ் அரசாங்கம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா பரிசோதனையை ரத்து செய்வதாக  அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் Covid19 வைரஸ் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு நாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், பிரான்ஸ் வரும் வெளிநாட்டுப் பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பின் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என்றும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்தால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளதவர்கள் பரிசோதனை செய்து 'தொற்று இல்லை' என 'கொரோனா நெகட்டிவ்' சான்றிதழை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.