கனடா செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்!

advertisement

கனடா தலைநகருக்குள் பிரவேசிக்கும் கொரோனா தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டோருக்கு தற்போது மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோனை முறைமைகள் எதிர்வரும் 28 ஆம் திகதியில் இருந்து முற்றும் விலக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பரிசோதனை முறைகள் மேற்கொள்ளப்படுவதால் பயணத் தடைகள் காணப்படுவதாகவும், அத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் முறைகளும் காணப்படுவதாகவும் இதனால் தொற்று காணப்படாத பயணிகளும் பெரும் சிரமங்களுக்கு உட்படுவதால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனாத் தாக்கம் மற்றும் பரவல் என்பன தடுப்பூசிகள் மூலம் குறைவடைந்து வரும் நிலையில் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் தமது சுய விருப்பத்தின் அடிப்படையில் கொரோனா பரிசோனை முறைகளை தெரிவு செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

கட்டாய பரிசோனை முறை இல்லாமல் செய்யப்படுவதாகவும், தனிமைப்படுத்தல் முறைகளும் அகற்றப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் ஜீன் யவ்ஸ் டுக்லோஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் விமான நிலையங்களில் சுகாதார பணியாளர்களின் கண்காணிப்பு தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நாட்களின் தரவுகளின் அடிப்படையில் கனடாவில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் வியத்தகு வீழ்ச்சி காணப்படுவதாகவும், தொடர்ந்தும் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறும் கனேடிய அரசாங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.