புதினுக்கு எச்சரிக்கை விடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி!

advertisement

ரஷ்யா உக்ரைனின் மீதான போரைத் தொடுக்கின்றது. அதற்கான விளைவுகளையும் தண்டணைகளையும் ரஷ்யாவிற்கு வழங்குவோம்.

போரை  நிறுத்தவிட்டால் அதற்கான பதிலடியை நாம் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் கொடுப்போம் என நேற்றைய தினம் ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.

இராஜதந்திரப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் (Vladimir Putin) போரைத் தொடர்ந்தால் நாங்களும் போரையே தெரிவு செய்வோம். அதற்கான விளைவுகளை விளாதிமிர் புதின் சந்திப்பார்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர், ஐரோப்பாவின் அமைதி மற்றும் பாதுகாப்பைச் சீர்குலைக்கும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் பாதுகாப்புச் சபையில் எச்சரித்துள்ளார்.