50 ஆண்டுகளுக்குப் பின் கனடாவில் அவசரநிலை சட்டம் அமுல்!

advertisement

கொரோனாவை கட்டுப்படுத்த கனடாவில் கொண்டுவரப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி திட்டம் என்பற்றை கண்டித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்களது லாரிகள் பறிமுதல் செய்யப்படும். 

போராட்டக்காரர்களால் போக்குவரத்து முடக்கிவைக்கப்பட்டுள்ள பாலங்களை உடனடியாக திறக்கவும் பிரதமர் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார். 

1970-ம் ஆண்டுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து. போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு கனடா. அமெரிக்கா இடையிலான பாலம் திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

போராட்டம் ஒன்றுக்காக கனடாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.