மீண்டும் வெற்றி பெற்ற இமானுவெல் மெக்ரான்!

advertisement

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் இமானுவெல் மெக்ரான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

2 சுற்றுக்களாக நடைபெறும் இந்த தேர்தலின் முதல் சுற்று கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

12 வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், இமானுவெல் மெக்ரனுக்கும், வலது சாரி கட்சியின் வேட்பாளரான மரைன் லே பென்னுக்கு இடையில் கடும் போட்டி நிலவியிருந்தது.

இந்தநிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாம் சுற்று வாக்களிப்பு முடிவுகளின் அடிப்படையில், இமானுவெல் மெக்ரன் 58 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட வலது சாரி கட்சியின் வேட்பாளரான மரைன் லே பென் 42 சதவீத வாக்குகளை பெற்றுக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இமானுவெல் மெக்ரன் பிரான்ஸ் ஜனாதிபதியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.