எலான் மஸ்க்கின் அதிரடி பதிவுகள்!!

advertisement

ட்விட்டர் நிறுவனத்தை நாற்பத்தி மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கிய பிரபல தொழிலதிபர்  எலான் மஸ்க் அடுத்ததாக கொக்கோ கோலா நிறுவனத்தை  வாங்க இருப்பதாக தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது குறித்து அவர் தனது டுவிட்டரில் அடுத்து கொக்கோ கோலா நிறுவனத்தை வாங்க போவதாகவும் மீண்டும் கோகெயினுடன் கொக்கோ கோலா நிறுவனத்தை சேர்க்கவேண்டும் எனவும் பதிவு செய்துள்ளார். 

மேலும் ட்விட்டரை பொது நம்பிக்கைக்கு தகுதியாக இருக்க, அரசியல் ரீதியாக நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் அவர் பதிவு செய்துள்ளார் ட்விட்டரை அடுத்து எலான் மஸ்க் வேறு என்னென்ன நிறுவனங்களை வாங்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

எலான் மஸ்க்கின் டுவிட்டர் பதிவுகள்