இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி கடலில் தத்தளிக்கும் கப்பல்கள்!

advertisement

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு, வேலைவாய்ப்பு இன்மை, மின்தடை போன்ற காரணங்களால் மக்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறிச் செல்லும் நிலை தற்போது அதிகரித்து வருகின்றது.

இதேவேளை எரிசக்தி அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் கப்பலுக்கு பணம் செலுத்தத் தவறியதன் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக கொழும்புக்கு அப்பால் உள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை குறித்த கப்பலுக்கான கொடுப்பனவை செலுத்தி கப்பலினை விடுவிப்பதற்கான டொலர்களை திரட்டும் நடவடிக்கையில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.