28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம்... 

#Marriage
advertisement

வயதான நபர் ஒருவருக்கு அவரது 35 பிள்ளைகள், 169 பேரக்குழந்தைகள் மற்றும் 28 மனைவிகள் சூழ்ந்திருக்க 37வது மனைவியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோவினை ஐ.பி.எஸ் அதிகாரி ரூபின் ஷர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் ’வாழும் தைரியமான மனிதர்’ என தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் இளம்பெண் ஒருவருடன் தனது மகன், மகள், மனைவிகள், பேரக்குழந்தைகள் சூழ ஆரவாரத்துடன் கொண்டாட்டமாக திருமணம் செய்துகொள்கிறார்.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, திருமணம் எங்கு நடந்தது போன்ற எந்த விவரமும் தெரியவில்லை. எனினும், சமூகவலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.